மிகவும் பிழையாகவும் அசிங்கமாகவும் பிரதி அமைச்சர் பைசல் காசிம் காழ்ப்புணர்வு அரசியல் செய்வது சிறுபான்மை கட்சிகளுக்கே வெட்க கேடு என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா தெரிவித்தார்.
முஸ்லீம்களின் விடிவுக்காக முஸ்லீம் சிறுபான்மை கட்சிகள் அரசியல் செய்வது வரவேற்கத்தக்கது இந்த நாட்டிலில் தனித்துவத்தோடு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனிக்காட்டு ராஜாவாக நடைபோட்டு வந்தாலும் மறைந்த எங்களின் மாபெரும் தலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் கட்சியை ஆரோக்கியமான முறையில் வழிநடத்த முடியாமல் ஆளுமை உள்ளவர்களையும் கட்சியை வழிநடத்த கூடியவர்களையும் இனம் கண்டுகொள்ள முடியாமல் தனித்துவத்தை இழந்து தட்டு தடுமாறி போனதே நாடறிந்த உண்மை .
இதன் போது கட்சியின் நிலைப்பாட்டை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் கட்சியின் உறுப்பினர்களும் பிரிந்து போன போது இன்றைய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக துறை அமைச்சருமான ரிஷாத் அவர்களும் வெளியேறினார் மறைந்த தலைவரின் சிந்தனையையும் வழிகாட்டலையும் கையிலெடுத்தார் பிரிந்து போனவர்களையும் ஆளுமையுள்ளவர்களையும் ஒன்றுபடுத்தி இன்று இந்த நாட்டில் அதிகமான அபிவிருத்திகளையும் சேவைகளையும் செய்ய கூடிய மாபெரும் தலைமையாக மாறினார் .
இன்று அபிவிருத்திகளும் மக்கள் சேவைகளும்தான் உண்மையான வெற்றிக்கு வழிசமைக்குமென்ற பாடத்தை தலைவர் அவர்களை பார்த்து பயணிக்க ஆரம்பித்த சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசையும் நாம் வரவேற்றுகின்றோம் ஆனால் அந்த பணியில் உங்களை நீங்கள் அடையாளப்படுத்துவதற்காக ஒரு கட்சியின் தலைவரின் சேவைகளை கொச்சைப்படுத்தி அபாண்டங்களை சுமத்தி பொய்யான அறிக்கைகளை விடுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
புத்தளம் தள வைத்தியசாலை விடயத்தில் பலதரப்பட்ட முன்னெடுப் புக்களை அமைச்சர்களை கொண்டு வந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் செய்து முடித்திருக்கின்ற நிலையில் இன்று புதிதாக பைசல் காசிமை கொண்டு வந்து மூக்கை நுழைத்து சர்ச்சையை உண்டுபண்ணுவதன் நோக்கமென்ன? நாடுபூராக எத்தனையோ முஸ்லீம் தொகுதிகள் கவனிப்பாரற்று கிடக்க இங்கே எதற்கு வந்து சர்ச்சை உண்டுபண்ணுகின்றார்கள் என்றால் அமைச்சர் ரிஷாத் அவர்களின் சேவைகள் புத்தளத்தில் பிரகாசிக்க கூடாதென்ற அவர்களின் வக்கிர அரசியல் முறைமையே காரணம்.
அமைச்சர் ராஜித சேனரத்னயும் கொண்டு வந்து மாஸ்டர் பிளேன் வரை செய்து முடித்திருக்கின்ற நிலையில் இருக்கின்ற போது இப்போது இந்த அமைச்சர் பைசல் காசிமை கொண்டு வந்து விட்டதில் காரணமென்ன ? இதற்குள் ஊடுருவி சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நிலைநிறுத்த எடுத்த முயற்ச்சியின் வெளிப்பாடே இந்த பிழையான குற்றச்சாட்டும் கேவலம்கெட்ட அறிக்கையுமாகும் . முஸ்லீம் சிறுபான்மை கட்சிகளுக்கே இழுக்கையும் கேவலத்தையும் உண்டுபண்ணும் உங்களின் தவறான முறைமையை இனியாவது மாற்றிக்கொள்ளுங்கள்.