Breaking
Mon. Dec 23rd, 2024

உடபலாத தேர்தல் தொகுதியின் கெலிஓய, கலுகமுவ பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உடபலாத பிரதேச சபை உறுப்பினர் பஸால் அவர்களின் ஏற்பாட்டில்  நடைபெற்றது.

இந் நிகழ்வில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் ஹம்ஜாட் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் இணைப்புச் செயலாளர் ரியாஸ் இஸ்ஸதீன் ஆகியோர் தலைமை ஏற்று நடாத்தி வைத்தனர்.

கலுகமுவ பிரதேசத்தின் விரைவில் அமைக்கப்பட இருக்கும் சிறுவர் பூங்கா தொடர்பாக இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் கலுகமுவ மத்திய கல்லூரியின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேசிய தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மிகுந்த அக்கரை எடுத்திருப்பதாகவும் கூடிய விரைவில் கல்வி மற்றும் பெளதீக வளங்களின் அபிவிருத்திகள் மேற்கொள்ள இருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலிகமுவ பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதிகள், ஊர் பிரமுகர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Post