ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரரின் பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் இனந்தெரியாதவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை முடக்கப்பட்டுள்ளது.
இந்த முடக்கத்தினை ஊடுருவல் நிறுவனங்கள் ஏதும் செய்யவில்லை என்றும், தனிப்பட்டவர்களினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதியை முறையை ஒழிக்கும் 19வது அரசியல் அமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அத்துரலிய ரத்ன தேரர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார். அத்தோடு, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும் அண்மைய நாட்களில் ஜாதிக ஹெல உறுமய முரண்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதனிடையே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரும் கூட்டமொன்றை ஜாதிக ஹெல உறுமய இன்று புதன்கிழமை கொழும்பில் நடத்தவுள்ளது.