எதிர்வரும் தினத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று தொடர்பில் அறிவிப்பு வெளியிடும் பட்சத்தில் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல உள்ளதாக ஜே வி பி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமது பதவி காலத்தில் நான்கு வருடங்கள் பூர்த்தி செய்த பின்னர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்லவும் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவும் எந்த தடைகளும் இல்லை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் எமது sfm பிரிவு ஜே வி பி யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத்திடம் வினவியது.
அதற்கு பதிலளித்த அவர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தேவைப்பாடு இல்லை என குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொது தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் அவர் வலியுறுத்தல் விடுத்தார்.