பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் போது, மாணவி ஒருவரின் முதுகெழும்பில் முறிவு ஏற்பட்டதாக வெளியான தகவலை இராணுவம் மறுத்துள்ளது.
கடந்த 9ம் திகதி தலைமைத்துவ பயிற்சியின் போது ஆறு அடி உயரமான சுவர் ஒன்றில் இருந்து குதித்த போது, கௌசல்யா விஷிதமால் என்ற மாணவிக்கு முதுகெழும்பில் முறிவு ஏற்பட்டதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.
இந்த நிலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதற்கு மறுப்புத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர் ருவண் வணிகசூரிய, மாணவிக்கு முதுகெழும்பில் முறிவோ வெடிப்போ ஏற்படவில்லை எனவும், அடிபட்டது மாத்திரமே எனவும் குறிப்பிட்டார்.
மேலும் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவி நேற்றைய தினமே சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். – u