ஏ.எச்.எம் .பூமுதீன்
மன்னார் வங்காலை பிரதேசத்தில்; தாகம் தீக்கும் இடத்தில் உள்ள நீர் அதிக உப்பு தன்மை கொண்டது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தானாக ஊற்றெடுக்கும் ஒரு தண்ணீர் ஊற்று எது வித உப்புத் தன்மையும் இல்லாமல் மக்களின் குடிநீர் பாவனைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது
நீண்டகாலமக ஊற்றெடுத்து வரும் இந்த நீரை பரிகி பார்க்க வேண்டும் என்பது அமைச்சரின் நீண்டநாள் ஆசை.
நாணாட்டான் பிரதேச நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்று திரும்பி வரும் வழியில் குறித்த நீர் ஊற்றருகில் தனது வாகனத்தை நிறுத்திய அமைச்சர் குறித்த நீரை பருகிப்பார்த்ததுடன் – குறித்த நீர் ஊற்று வீணடிக்கப் படாமல் இருப்பதற்காக உரிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடமாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.