ஹாசிப் யாஸீன்
நீரிழிவு இல்லாத இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சு இன்று உலக நீரிழிவு தினத்தை அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நீரிழிவு நோய் பரிசோதனை விசேட கிசிச்சை முகாம் இன்று வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். றிஸ்பின் தலைமையில் இடம்பெற்றன.
இப்பரிசோதனை முகாமில் காரைதீவு சண்முகா வித்தியாலய ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது நீரழிவு நோய்க்கான இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்தப் பரிதோனை என்பன மேற்கொள்ளப்பட்டதுடன் மக்கள் உண்ணக்கூடிய ஆரோக்கியமான உணவு வகைகளும், மரக்கறி வகைகளும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.