Breaking
Tue. Nov 26th, 2024

கொத்தாந்தீவு மக்களுக்கான காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான பொதுக்கூட்டம் நேற்று (28) கொத்தாந்தீவில் இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளருமான ஹெக்டர் அப்புஹாமி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி அமைப்பாளர் ஆப்தீன் எஹியா, கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஆஷிக், சஹ்தி மற்றும்  ஐ.தே.க கல்பிட்டி தொகுதி அமைப்பாளர் நஸ்மி ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

இங்கு கலந்துக்கொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் உறையாற்றும் போது,

மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் பிரதேசமென்றால் புத்தளத்தை சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.  இந்த ஒற்றுமையை அரசியலுக்காக சீர்குலைக்க சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.

நம்மோடு ஒன்றாகக் கலந்து வாழ்ந்த இடம்பெயர் மக்களையும், உள்ளூர் மக்களையும் பிரித்து அரசியல் இலாபம் காண பிரதேசவாதத் தீயையும் பிரிவினையையும் சிலர் கடந்த தேர்தலில் ஏற்படுத்தியிருந்தனர்.

தற்போது, சிலர் இவ்வாறான காணிப்பிரச்சினைகளிலும் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். நான் இவ்வாறான பிரிவினை வாதத்தை உருவாக்கி ஒருபோதும் அரசியல் செய்யப்போவதில்லை.

அவ்வாறு பிரிவினைவாதத்தைத் தூண்டி அரசியல் செய்வதற்கு நான் இடமளிக்கப்போவதுமில்லை. பிரிவினை அரசியலாலேயே நாம் இன்னும் புத்தளத்திற்கு ஓர் பாராளுமன்றப் பிரதிநிதியை வென்றெடுக்க முடியாமல் அரசியலில் பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றோம்.

மேலும், இவ்வாறான பிரச்சினைகளில் நாம் ஒரு சமூகத்தை இன்னோரு சமூகத்தினர் மத்தியில் குரோதத்தை உருவாக்குவதைத் தவிர்ந்தும் ஒற்றுமைப்படுத்தி வழிநடாத்தும் தலைவர்களாகவே அரசியல்வாதிகளான நாம் செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

(ப)

Related Post