Breaking
Mon. Nov 25th, 2024

துருக்கி நிறுவனம் ஒன்றின் உதவியுடன் குளியாப்பிடிய பிரதேசசபைக்குட்பட்ட மிகநீண்ட நாட்களாக நீருக்காக கஷ்டப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் மாராப்பிடிய, பகமுனே ஆகிய இரண்டு கிராமங்களுக்கு குழாய் கிணறு மூலம் நீரை பெற்றுக்கொள்ளும் வசதிகளை பெற்றுக்கொடுத்ததுடன், நேற்று முன்தினம் (27) துருக்கி நாட்டு நிறுவன சகோதரர்களுடன் இணைந்து  மக்கள் பாவனைக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் திறந்து வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவதுடன், பெரும்பான்மை இன சகோதரர்களுக்கும் இத்திட்டம் செய்து கொடுக்கப்பட்டதால் சகவாழ்வை கட்டியெழுப்ப துருக்கி அரசாங்கம் உதவியுள்ளதாகவும் அமைப்பாளர் நஸீர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், வடமேல் மாகாணசபை உறுப்பினர் சமன்பிரிய ஹேரத், துருக்கி பல்கலைக்கழக மாணவன் ஹஸான் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் ரியாஸ் மௌலவி மற்றும் ஊர் மக்கள் உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Post