Breaking
Sun. Jan 12th, 2025
இவ்வாண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற மலாலா யூசுஃப் ஸாய்க்கு எதிராக தனியார் கல்வி நிறுவனங்கள்,’ஐ ஆம் நாட் மலாலா’ என்ற தினத்தை கடைப்பிடித்தன. மலாலாவின் ‘ஐ ஆம் மலாலா’ என்று நூலில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஃபெடரசன் தலைவர் மிர்ஸ் காஷிஃப் அலி கூறியது:இந்நூலில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் உள்ளன.இஸ்லாத்திற்கு போதிய கண்ணியம் அளிக்கப்படவில்லை.சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி புனிதராக சித்தரிக்கப்படுகிறார்.நூலில் இடம்பெற்றுள்ள விமர்சனங்களை கருத்து சுதந்திரம் என்று மலாலா சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வமைப்பு, மலாலாவின் சுயசரிதையான ‘ஐ ஆம் மலாலா’ நூலை தடைச் செய்யவேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.எல்லா வருடமும் நவம்பர் 10-ஆம் தேதி ’ஐ ஆம் நாட் மலாலா’ தினம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.பள்ளிக்கூடங்களில் ஏற்கனவே மலாலாவின் சுயசரிதை நூலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Post