கடந்த சில வாரங்களாக விலை நிர்ணயத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நிந்தவூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
இதனால் பொதுமக்கள் இறைச்சி கொள்வனவில் பல அசெளகரியங்களுக்குள்ளாகியதோடு அதனை பிரதேச சபை உள்ளிட்ட பல மட்டங்களுக்கும் எழுத்துமூலமாக தெரிவித்திருந்தனர்.
நேற்று (13) நிந்தவூர் பிரதேச தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில், நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்ற சபை உறுப்பினர்கள் மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர்கள் ஆகியோருடன், இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே, நாளைமுதல் நிந்தவூரில் மீண்டும் இறைச்சிக்கடைகள் திறக்கப்படும் எனவும், 1Kg தனி மாட்டிறைச்சி 850 ரூபாவுக்கு விற்கப்படும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நிந்தவூர் பிரதேச சபையின் உபதவிசாளர், உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
-முர்ஷிட்-