கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன,தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள விக்கிரமபாகு கருணாரத்ன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி தவிர்க்க முடியாதது. ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி யினர் கூட்டிணைந்து ஒரு வேட்பாளரை தேர்தலில் களமிறக்குவார்கள்.
அதன் மூலம் அரசாங்கத்திற்கு சார்பாகவுள்ள இனவாத அடிப்படையிலான வாக்குகள் பிரிந்து செல்லும் வாய்ப்புக் காணப்படுவதால், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான நிலை ஏற்படும்.
இந்நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும். அவரையே பொது வேட்பாளராக முன்னிறுத்தி, வெற்றி பெறச் செய்வதன் மூலம் இந்நாட்டில் அதிகாரப் பரவலாக்கலுக்கான வழி பிறக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.