கொழும்பில் இருந்து புத்தளம் அருவாக்காடு பகுதிக்கு கொண்டுவரப்பட உள்ள குப்பைக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி இளைஞர் அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஆஷிக் நேற்று (18) கல்பிட்டி பிரதேச சபையின் 07 வது அமர்வின்போது, தனது எதிர்ப்பினை கருப்பு நிறப்பட்டி அணிந்தும், “புத்தளம் கொழும்பின் குப்பைத்தொட்டியல்ல” என்ற வாசகத்துடனான பதாதை ஏந்தியும் வெளிக்காட்டினார்.
பின்னர் இதுப்பற்றி அவர் சபையில் கருத்துத்தெரிவிக்கையில்,
கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவரப்படவுள்ள குப்பைகள் மருத்துவக்கழிவுகளும் இரசாயனக்கழிவுகளும் பிளாஸ்த்திரிக் கழிவுகளுமே இக்குப்பை கொட்டப்போகும் இடத்தினை அண்மித்து வில்பத்து காணப்படுகின்றது.
அத்தோடு ஒரு ஆறும் இவ்விடத்தை அண்மித்துச்சென்றே கடலுடன் சேர்கின்றது. இக்குப்பையில் ஏற்படும் சிறுக்கசிவினால் கடல் நீர் நஞ்சடையும், அதிலிருந்து பெறப்படும் நீரைக்கொண்டு உப்பளம் செய்து நாம் முழு நாட்டிற்குமே உப்பு உற்பத்திகளை வழங்கிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த உப்பும் விஷமாக மாறுவதற்கான வாய்புக்களும் உள்ளன.
அது மட்டுமல்ல வில்பத்திலுள்ள வளங்களினதும் பாதுகாப்பும் கேள்விக்குறியே! தொடர்ந்தும் சுவாச நோய், மூலைவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் பிறப்பு என ஏராளமான வாய்ப்புகள் ஏற்படும். எனவே, சபைத்தலைவர் இவ் எதிர்ப்பு இப்பிரேரணையை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு வேண்டுகோள்விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து, சபைத்தலைவர் இப்பிரேரணையை ஏற்றதுடன் உரியவர்களின் கவனத்திற்கு இந்தப் பிரேரணையை கொண்டு சென்று, இத்திட்டத்தை நிறுத்த முயற்சிப்பதாகவும் கூறினார்.
(ப)