A.H.M.BOOMUDEEN
வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம் ஹால்தீனின் மறைவு இலங்கை நிர்;வாக சேவையில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக அ.இ.ம.க தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளது வருமாறு
வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஹால்தீனின் மறைவுச் செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும் துயரும் உற்றேன்.
நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஹால்தீன் முதல் முதலாக செயலாளராக பதவியேற்று , கடமையாற்றியது நான் முன்னர் பதவிவகிர்த்த மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் போதுதான்.
அப்போது, செயலாளர் என்ற ரீதியில் அவர் ஆற்றிய பணி அளப்பரியது.
யுத்தம் நிறைவுற்று மூன்று இலட்சம் தமிழ் மக்கள் மெனிக்பாமில் தஞ்சம் அடைந்த போது அந்த மக்களை துரிதமாக மீள் குடியேற்றுவதற்கும் மீள்குடியேற்ற பகுதியில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளுக்கும் தான் எடுத்த அத்தனை முயற்சிகளுக்கும் மிகவும் உறுதுணையாக இருந்து பெரும் பணியாற்றினார்.
அNதுபோல் புத்தளத்தில் அகதியாக உள்ள வடமாகாண முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக் கொடுப்பதிலும் எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்தார்.
வடமாகாண விவசாய அமைச்சு செயலாளராக தான் மரணிக்கும் வரை கடமையாற்றிய ஹால்தீன் வடக்கின் விவசாயத் துறையில் முன்னேற்றகரமான திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளார்.
கொழும்பில் இன்று கம்பீரமாக காட்சியளிக்கும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் கட்டிடம் அமைவுறுவதற்கும் அதற்கான காணியை பெற்றுக்கொடுப்பதற்கும் மர்ஹூம் ஹால்தீன் ஆற்றிய பணி காலத்தால் அழியாதது.
தனது சொந்த ஊரில் உள்ள குர்ஆன் மத்ரஸா ஒன்றுக்கு உதவிகளை வழங்குமாறு என்னிடம் வேண்டி நின்று என்னை அங்கும் அழைத்தும் சென்றிருந்தார். அங்கு சென்ற பின்னர்தான் தெரியவந்தது அந்த மத்ரஸாவின் தலைவர் மர்ஹூம் ஹால்தீன் தான் என்று.
தனது நிர்வாகப்பணிகளுக்கு மத்தியில் மார்க்க ரீதியான பணிகளிலும் மர்ஹூம் ஹால்தீன் தன்னை அர்ப்பணித்திருந்தார்.
இலங்கையின் சிரேஷ்டத்துவம் மிக்க , அனுபவம் மிக்க நிர்வாக சேவை அதிகாரியான ஹால்தீனின் மறைவு நாட்டுக்கு மட்டுமன்றி முஸ்லிம் சமுகத்திற்கும் பாரிய இழப்பாகும்.
அன்னாரின் மறைவினால் துயர் உற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு , அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சொர்க்கம் கிடைக்க பிரார்த்திற்கிறேன் , பிரார்த்திப்போமாக