கம்பஹா மாவட்டத்தின் களனி பிரதேச சபைக்குட்பட்ட ஹுனுபிடிய ஸ்ரீ ராஹுல வித்தியாலத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்தரையாடலொன்று அண்மையில் (21) இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜெ.எம்.பாயிஸ் அவர்களின் தலைமையில், இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகளும் எட்டப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், ஹுனுபிடிய சாஹிரா வித்தியாலயத்துக்கு விஜயம் செய்து, அங்கு புதிதாக அமைக்கப்படும் மூன்று மாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்களினதும் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டதுடன், பாடசாலையின் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் அதிபர், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
(ன)