Breaking
Mon. Nov 25th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) மற்றும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) ஆகியன இணைந்து நடாத்திய, தொழில் முயற்சியாளர்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு, களுத்துறை மத்திய கல்லூரியில் இன்று (29) இடம்பெற்றது.

களுத்துறை நகரசபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் களுத்துறை அமைப்பாளருமான ஹிஸாம் சுஹைலின் தலைமையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொதுசன தொடர்பு அதிகாரி ஐ.எஸ்.எம்.மொஹிடீனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், களுத்துறை நகரசபைகுட்பட்ட கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர்.

புதிய சுயதொழில்களை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் தத்தமது பிரதேசங்களில் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி சுயதொழில்களை மேற்கொள்ளும் வழிமுறைகள் பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு கருத்தரங்காக இது அமைந்திருந்தது.

அத்துடன், களுத்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான, வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்திட்டத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் 04 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.

இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் களுத்துறை மத்திய குழு உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(ன)

Related Post