Breaking
Tue. Dec 24th, 2024

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்..அன்சிலின் முயற்சியில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்   நிதியொதுக்கீட்டில், பாலமுனை அல்/ஹிதாயா மகளிர் கல்லூரிக்கும் அதேபோன்று, பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கும் புதிய நுழைவாயில் ( GATEWAY) அமைக்கப்படவுள்ளது.

அண்மையில் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய உடனடியாக நிதியொதுக்கிய நிலையில், தயாரிக்கப்பட்ட நுழைவாயில் அமைப்பு மாதிரிகள் (Model), இன்று காலை (30) கலந்தாலோசித்து, உறுதி செய்து, வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அனுப்பி வைக்கப்பப்பட்டது.

இதன்போது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.அப்துல் அன்சார் ஆசிரியர் உள்ளிட்ட பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், பாலமுனை சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் பி.எம்.ஹுஸைர் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(ஐ)

Related Post