அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளது.
நேற்று ஜாதிக ஹெல உறுமய ஆளும் கட்சியிலிருந்து வெளியேறுவதா இல்லையா என்பது தொடர்பில் கட்சிக்குள்ளே நடத்திய இரகசிய வாக்கெடுப்பில் 90% வீதமானோர் கட்சியிலிருந்து வெளியேறுமாறு வாக்களித்துள்ளனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.