ஐந்தாம் தர புலமைப் பரீட்சையின் திருத்தியமைக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகள் நேற்று (17) வெளியிடப்பட்டது.
இதற்கமைய, கொழும்பு, கண்டி மற்றும் மாத்தளைக்கு 152 வெட்டுப்புள்ளியாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு 150 வெட்டுப்புள்ளியாகவும் அமைந்துள்ளது.
இதனைத்தவிர, மன்னார், முல்லைத்தீவு, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு 149 வெட்டுப்புள்ளியாக காணப்படுகின்றது.
-News1st-