முசலி பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு தவிசாளர் சுபியான் தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வின் முக்கிய அம்சங்கள் வருமாறு.
1.வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இம்மாதத்துடன் 28 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும் இன்னும் அம்மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தியடையாமை.
2.முசலி மக்களை அரவணைத்துள்ள புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிர்ப்பும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1990 இல் புலிகளால் வெளியேற்றப்பட்ட முசலி முஸ்லிம்களுக்கு புத்தளம் தஞ்சமளித்தமைக்காகவும் இன்னும் தொடர்ந்து முசலி முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் புத்தளத்தில் வாழ்ந்து வருவதாலும் புத்தளத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் பிரேரணையை பிரதித் தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன் முன்வைத்து உரையாற்றினார்.
இப்பிரேரணையை தவிசாளர் A.G.K. சுபிஹான் வழிமொழிந்ததுடன் சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
3.முசலியில் இவ்வருடம் இடம்பெறவுள்ள மீலாத் விழாவுக்கு சபையினரின் ஒத்துழைப்பு
4.முசலியில் சமுத்திரவியல் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அமைச்சர் ரிசாட் பதியுதீனின் நடவடிக்கையை முன்னெடுத்தல்
5.சிலாவத்துறை தபாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க தபால் அமைச்சரை அழைத்து வந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனின் முயற்சியை முன்னெடுத்தல்
6.முசலியில் சுற்றுலாத்துறை மற்றும் மர நடுகை தொடர்பான நடவடிக்கைகள்
7.சபையின் பழுதடைந்துள்ள வாகனங்கள் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள்
8.அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்த முன்னேற்பாடுகள்
9.சிலாவத்துறை கடற்படையினர் வசமுள்ள இரு பள்ளிவாசல்களை சபையினர் பார்வையிட அனுமதி கோரல் மற்றும் சிலாவத்துறை கடற்படையினர் விடுவிக்க இணக்கம் தெரிவித்த மக்களின் 6 ஏக்கர் காணியை முதற்கட்டமாகப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
10.வீட்டுத்திட்டம், உள்ளக வீதிகள், தெரு விளக்குகள், நீர் வழங்கல், மண் அகழ்வு தொடர்பான விடயங்கள்
அடுத்த 9 ஆவது சபை அமர்வு 2018.11.13 ஆம் திகதி நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டது.