எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு லங்கா சம சமாஜ கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
ஆட்சியிலுள்ள அரசாங்கத்தில் பல குறைப்பாடுகள் உள்ளன என்பதை ஏற்று கொள்கின்றோம். எனினும் நாட்டை முன்னேற்ற பாதையில் இந்த அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது.
நாட்டில் ஊழல் மோசடிகள் குறித்து பேசப்படுகின்றது. செலவந்நத தரப்புக்களுடன் இணைந்து அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது ஊழல் மிகுந்த நிலைமை உருவாக சாத்தியம் உள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியாவிலும் இந்த நிலைமையை நாம் காணுகின்றோம். அதனால் தான் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் தூக்கியெறிப்பட்டது எனச் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நாட்டின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்தவினால் மாத்திரமே முடியும். எனவே அவரை மீண்டும் அவரை கொண்டுவர ஒத்துழைப்பு வழங்குவோம்.
எதிரணி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என கூறுகின்றது. ஆனால் அவர்களிடம் அதற்கான உண்மையான நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. அதனால் மக்கள் மத்தியில் பொது வேட்பாளர் தொடர்பில் நம்பிக்கையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.