அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஐெ.மொஹம்மத் பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில், கொழும்பு – 15, மோதரை, கிம்புளா எல பிரதேசத்தின் இல 162/230 வீதியின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிம்புளா எல பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த இந்த வீதியை செப்பனிட்டு காபட் இடும் பணிகளை மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஆரம்பித்து வைத்தார். இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் உடனிருந்தனர்.
(ன)