Breaking
Mon. Dec 23rd, 2024
கிண்ணியா கலாசார மண்டபம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பம்!

கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கில். 

கிண்ணியா மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கிண்ணியா பிரதான வீதியில் குட்டித்தீவில் கிண்ணியா கலாசார மண்டபம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் 4 மில்லியன் ரூபா செலவில் தடுப்புச்சுவர் (Retain wall) மற்றும் இடத்தினை நிரப்புதல் வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் அனஸ், கிண்ணியா நகரசபை உறுப்பினர்களான மஹ்தி, நிஷார்டீன் உட்பட பலர் கலந்துகொண்டனர் .

-ஊடகப்பிரிவு-

Related Post