Breaking
Mon. Dec 23rd, 2024

முசலி பிரதேச சபையின் தவிசாளர் சுபியான் தலைமையில், முசலி வள நிலையத்தின் ஏற்பாட்டில் [MRC],  பொற்கேணி பிரதான வீதி அருகில், மர நடுகைத் திட்டம் இன்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், முசலி பிரதேச சபையின் உப தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன் மற்றும் சிலாவத்துறை பொலிஸ் நிலைய உயர் அதிகாரி, கடற்படை அதிகாரிகள் உட்பட  இளைஞர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இத்திட்டம் வெற்றிகரமாக இடம்பெற ஒத்துழைப்பு செய்தவர்களுக்கும், உதவி நல்கியவர்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

(ஐ)

 

Related Post