Breaking
Mon. Dec 23rd, 2024
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகம் மற்றும் முதியோர் சங்கம் இணைந்து நடாத்தும் சர்வதேச சிறுவர் மற்றும்  முதியோர் தின நிகழ்வு நேற்று (20) செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது, விஷேட அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் கலந்துகொண்டார்.
இங்கு உரையாற்றிய ரிப்கான் பதியுதீன் அவர்கள், கல்வி, கலை போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களையும், முதியோர்களை கௌரவித்து அன்பளிப்புக்களையும் வழங்கி வைத்தார்.
பிரதேச செயலாளர் ஶ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், வட மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் வனஜா செல்வரத்னம், முதியோர் சங்கத் தலைவர் நஜிமுதீன் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மது உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-ஊடகப்பிரிவு-

Related Post