அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா, மினாநகர் பள்ளிவாசலின் சுற்றுமதிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (21) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், மக்கள் தொடர்பு அதிகாரி மெளலவி தாஹிர், வவுனியா நகர சபை உறுப்பினரும், இணைப்பாளருமான அப்துல் பாரி, மீள்குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் சியாம், பிரதேச சபை வேட்பாளர் மன்சூர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், வவுனியா அல் ஹாமியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும் கடந்த வெள்ளிக்கிழமை (19) பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், மக்கள் தொடர்பு அதிகாரி மெளலவி தாஹிர், இணைப்பாளர் அப்துல் பாரி, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜான்சர், மீள்குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் சியாம், இணைப்பாளர் நஜிமுத்தீன், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துசிறப்பித்தனர்.
(ன)