திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 இலங்கை அகதிகள் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏராளமான இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த நிலையில் நேற்று 20 பேர் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.