Breaking
Mon. Dec 23rd, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்,  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிரினால் முன்னெடுக்கப்படும்,  நிந்தவூரின் பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைவாக,  20 இலட்சம் ரூபா செலவில், தமிழ் சகோதரர்களின் மயான பூமியின் சுற்றுமதில்  அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் நீர், மின் இணைப்பு போன்ற வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு  அண்மையில் (01) குறித்த மயான பூமியில் இடம்பெற்றது.

தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிந்வூரின் தமிழ் பகுதி மக்களோடு, நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊர்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனினால் மேற்கொள்ளப்படும், நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி திட்டங்களின் ஒரு பகுதியாக, பள்ளிவாசல் மற்றும் கலாசார நிலையங்களின் அபிவிருத்தி திட்டங்களுக்கான, இரண்டாவது கட்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று, மக்கள் காங்கிரஸின் அம்பாரை பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்றது.

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், பள்ளிவாசல்களின் தலைவர்கள், செயலாளர்கள், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post