Breaking
Mon. Dec 23rd, 2024
தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்ற 2019 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட விவாதம் இன்று மன்னார் பிரதேச சபையில் இடம்பெற்றதுடன் அதற்கான வாக்கெடுப்புகளும் இடம்பெற்றன, மன்னார் பிரதேச சபையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் ஜீவானந்தன் அவர்களினால் வரவு செலவுத்திட்டத்தின் விவாதத்திற்கு ஆதரவாக முன்மொழியப்பட்டதுடன் சிறீலங்க சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் அலியார் ஸாபிர் அவர்களினால் வழி மொழியப்பட்டு வரவு செலவுத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இந்த வரவு செலவுத்திட்ட வெற்றியானது இக்கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்திற்கும் கிடைத்த மக்கள் ஆணையாகும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை, அவ்வாறே இன மத வேறுபாடின்றி சேவை செய்யும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்களின் அயராத முயற்சிக்கு மக்கள் பிரதிநிதிகளினால் கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஊடகப்பிரிவு

Related Post