Breaking
Mon. Dec 23rd, 2024

திருகோணமலை மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த 12 ஏக்கர் காணிகள் நேற்று (10) கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃரூப், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கல்லம்பத்தை எனும் பகுதியில் 5 ஏக்கர் காணி, மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் பாட்டாளிபுரம் பகுதியுல் 2 ஏக்கர் காணி, தோப்பூர் பகுதியுல் 3 ஏக்கர் காணி, சேருநுவர பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சித்தாறு பகுதியில் 2 ஏக்கர் காணியுமாக மொத்தம் 12 ஏக்கர் காணி நேற்று விடுவிக்கப்பட்டது.

காணிகளை கையளிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக வளாகத்தில் நேற்று (10) திங்கட்கிழமை பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது.

Related Post