Breaking
Mon. Dec 23rd, 2024

மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட, வட்டக்கண்டல் வட்டாரத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் குழந்தை யேசு ஆலய உள்ளக வீதியை கொங்கிறீட் வீதியாக புனர்நிர்மாணிக்கும் வேலைத்திட்டம், மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆசீர்வாதம் சந்தியோகு தலைமையில் ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வில், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் கலந்து சிறப்பித்ததுடன், மாந்தை மேற்கு பிரதேச சபை வட்டக்கண்டல் வட்டார உறுப்பினர்களான நைசர், செளந்தரராசா, ஆள்காட்டிவெளி வட்டார உறுப்பினர் பா.பிரபாநந்தன் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில்,இந்த கிராமத்திற்கு பெரு நிதியான 47,50000 ரூபாவினை ஒதுக்கித் தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு, மாந்தை மேற்கு பிரதேச மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

Related Post