அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் எருக்கலம்பிட்டி மகளீர் மகா வித்தியாலயத்திற்கான போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது அதிபர் அஸ்மீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அமைச்சரின் பிரத்தியோக செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களும் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் மஹீசா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.