சுதேச கைவினைத் துறையினை போஷித்து பேணிப்பாதுகாக்கும் நோக்குடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவை ஏற்பாடு செய்த ”சில்ப அபிமானி – 2018” கைவினைத் தொழிற்துறை கண்காட்சி விழா இன்று (31) குளியாப்பிடிய நகர மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
கைத்தொழில் வர்த்தக அமைச்சரும் தேசிய தலைவருமான ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் கீழ் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் மாவட்ட தலைவருமான எம்.என்.நஸீர் (MA) கலந்து கொண்டார்.
அருங்கலைகள் பேரவையின் தலைவி ஹேசானி போகொல்லாகம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்.
புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா,முன்னால் வடமேல் மாகாணசபை முதலமைச்சர் தர்மஸ்ரீ தசநாயக, குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், குருநாகல் மாநகரசபை உறுப்பினர் அஸார்தீன், குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீர் மற்றும் அருங்கலைகள் பேரவையின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்