Breaking
Sun. Jan 12th, 2025
நஜீப் பின் கபூர்
இலங்கையில் அடுத்து வருகின்ற 48 மணித்தியாலங்களும் அணல் பறக்கின்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கும் என்பதனை நமது வாசகர்களுக்கு முன்கூட்டி அறியத் தருகின்றோம்.  செய்திகளை உடனுக்குடன் முடிந்தளவு வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.
எமக்குக் கிடைத்த மிகப் பிந்திய தகவலின்படி சுதந்திரக் கட்சி செயலாளர் மைத்திரிபால சிரிசேனாவை ரணில்  விக்ரமசிங்ஹ பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டிருக்கின்றார். அதற்கான உறுதி மொழி இந்த ஏற்பாட்டின்  முக்கிய பாத்திரமாக செயலாற்றுகின்ற  மாதுவாவே சோபித தேரருக்கு ரணிலினால் உறுதியளிக்பட்டிருக்கின்றது.
இதற்கிடையில் மைத்திரிபாலவுக்கு ஜனாதிபதி கடைசி நேரத்தில் பிரதமர் பதவியை வழங்க முன் வந்தபோதும் அவர் அதனை நிராகரித்து விட்டதாகவும் அறியப்படுகின்றது.
அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேற இருக்கின்றார்கள். அத்துடன் சிரிலங்கா சுதந்திரக் கட்சி நலன் பேணும் அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்கள் மைத்திரிபால சிரிசேன தலைமையில் பாராளுமன்றத்தில் தனிக் குழுவாக செயலாற்றவும் இருக்கின்றார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
எதிரணி பொது வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரிபால தலைமையிலான சுதந்திரக் கட்சி நலன்போணும் குழு, ஜதிக ஹெல உறுமய,  பொன்சேக்காவின் ஜனநாயக் கட்சி, இ.ச.ச.கட்சி (பெரும்பான்ம) இ.க.கட்சி (பெரும்பான்ம) ஜனநாய மக்கள் முன்னணி, தொழிற் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், இன்னும் பல சில்லறைகளும் பொது வேட்பாளரை ஆதரிக்க உறுதியளித்திருக்கின்றன.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. மைத்திரிபால சிரிசேனாவை பொது வேட்பாளராக்கும் உறுதி மொழியை ரணிலிடம் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ பெற்றுக் கொண்ட பின்னரே இந்த அரசியல் மாற்றங்கள் உறுதியாகி இருக்கின்றது.
தற்போது பொது வேட்பாரை ஆதரிக்கும் எவரும் தனிப்பட்ட நிகழ்சி நிரல்களையோ கோரிக்கைகளையே தூக்கிக் கொண்டு வரக் கூடாது என்று அதன் ஏற்பாட்டாளர் சோபித தேரர் த.தே.கூட்டமைப்பிற்கும், மு.கா.வுக்கும் சிவப்புக் கொடி காட்டி இருக்கின்றார். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் கூறப்படுகின்றது.

Related Post