எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த முடிவுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவளித்துள்ளனர். மேலும் பொது வேட்பாளராக களமிறங்குவது குறித்து அமைச்சர் மைத்திரிபாலவும் உத்தரவாதமொன்றை நேற்று வழங்கியுள்ளார். இதனையடுத்து இன்று மாலை நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவரது பெயரை அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நேற்றிரவு அலரிமாளிகையிலிருந்து சில விசேட குழுக்கள் பொலன்னறுவைக்குப் புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.