உலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
தொலைக்காட்சியின் முக்கியத்துவம் தொடர்பில் இந்தத் தினத்தில் எடுத்துச் சொல்லப்படுகிறது.
1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21 ஆம் திகதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது.
இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது.
உலகின் தொழிநுட்ப வளர்ச்சியின் பரிமாணத்தில் பல மின்சாதனப் பொருட்கள் மனிதர்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் மனிதனை ஓரிடத்திலிருந்து உலகில் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்று கண் முன்னே உள்ள தொழிநுட்ப சாதனம் மூலம் காட்டுவதே தொலைக்காட்சி ஆகும்.
இந்த தொலைக்காட்சி கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து இன்றைய இப்பொழுது வரை மனிதனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாதனங்களில் ஒன்றாக நிலை பெற்றுள்ளது. பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரையும் தன்பால் ஈர்த்து அவர்கள் இலகுவில் அணுகக்கூடிய ஒரே தொலைத்தொடர்பு சாதனங்களில்
தொலைக்காட்சிதான் முன்னிலை வகிக்கின்றது.