ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவுக்கும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், அலரி மாளிகையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் மைத்திரிபால தலைமையில், பத்தரமுல்ல பிரதேசத்தில் நிகழ்வொன்று ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அந்நிகழ்வில் கலந்துகொள்ளாத அமைச்சர், ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஈடுபட்டு வருவதாக மேற்படி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.