ஐந்து வருடங்கள் சுகாதார அமைச்சராக இருந்து சேவையாற்றிவிட்டேன். எதிர்காலத்தில் நான் நாட்டுக்காக என்னை அர்ப்பணிப்பேன் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்துகொண்டு அமைச்சர் தற்போது உரையாற்றி கொண்டிருக்கின்றார். அதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுவே, எனது இறுதி வைபவமாக கூட இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.