நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவேன் என மைத்திரிபால சிறிசேன தற்போது கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
ஆளும்கட்சியின் செயலாளர் ஒருவரை அழைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தலில் வரலாற்று முதன்முறையாக இவ்வாறு அனுமதி வழங்கியமைக்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் பின்னர் அவர் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அவருடைய பாதுகாப்புகளை வாபஸ் பெறுவதற்கு அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (sl)