சு.க பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கட்சி மாறி பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரும் அதிர்ச்சியடைந்த முகா இன்று அவசரமாக கூடியது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் அமைச்சு அலுவலகத்திலேயே இந்த அவசர ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது.
இந்த ஒன்று கூடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை கட்சி மாறிய மைத்திரியின் ஊடுகவியலாளர் மாநாடும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
இதனை அடுத்து தமது ஒன்று கூடலை சற்று தாமதப்படுத்திய முகா தரப்பினர் – மைத்திரியின் ஊடகவியலாளர் மாநாட்டை மிகவும் உன்னிப்பாக அவதானித்தனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பலமிக்க போட்டியாளராக மைத்திரி காணப்படுவதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு ஆதரவளிப்பதா அல்லது மகிந்தவுக்கு ஆதரவளிப்பதா என்ற தடுமாற்றம் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது.
மகிந்தவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்பிலும் இங்கு விஷேடமாக ஆராயப்பட்டதுடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மாற்றம் காரணமாக மைத்திரியுடனும் அடுத்து பேசுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மைத்திரியின் இந்த மாற்றமும் அறுவர் கட்சி தாவியமையும் முகா வை பொறுத்தவைர பெரும் அதிர்ச்சிக்குரிய விடயமாகும்.
thanks – sri lanka muslims