Breaking
Sun. Nov 24th, 2024

ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் பாடசாலையை விட்டு வெளிச்செல்வதை பாடசாலை நிருவாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் 2019ம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி குழுவின் முதலாவது கூட்டம் இன்று (வியாழக்கிழமை) 14.02.2019 பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் அதன் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் எஸ்.ரீ.எம்.புர்ஹான் ஆகியோரது தலைமையில் இடம் பெற்ற போதே இராஜாங்க அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

பாடசாலை நேரங்களில் பாடசாலை மாணவர்கள் ஓட்டமாவடி மற்றும் மீறாவோடை ஆற்றுக்கு அன்மித்த பகுதிகளில் பாடசாலை சீறுடையுடன் மீன்பிடித்து விளையாடுவதாகவும் அதே போன்று ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் விளையாடுவதாகவும் மாணவர்களை பிடித்து விசாரித்த போது எங்களை பாடசாலையில் இருந்து பாதணி அணியவில்லை மற்றும் முடி வெட்ட வில்லை என்று துறத்திவிட்டதாகவும் பாடசாலை நேரம் கழியும் வரை விளையாடுவதாகவும் தெரிவிக்கின்றனர் என்று பொது அமைப்புக்களின் பிரதிநிதிதகளால் அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன் போது அபிவிருத்தி குழு இணைத்தலைவரான இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் பாடசாலையில் இருந்து மாணவர்களை அவர்களது குற்றங்கள் தொடர்பக வெளியே அனுப்புவது என்றால் குறித்த மாணவனின் பெற்றோர்களுக்கு அறிவித்து அவர்களிடமே குறித்த குற்றத்தை தெரிவித்து மாணவர்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பிரதேசத்தின் போதைவஸ்து தொடர்பாக கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் நாட்டின் ஜனாதிபதியின் விஷேட வேலைத்திட்டத்தில் போதை ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது அதன் அடிப்படையில் எமது பிரதேசத்தில் போதைவஸ்து விற்பனை செய்பவர்கள் தெடர்பாக இணங்கானப்பட்டுள்ளதுடன் அவர்களை அத் தொழில் இருந்து விடுவிப்பதற்காக பிரதேச செயலகம், பிரதேச பள்ளிவாயல்கள் பொது அமைப்புக்கள் என்பன ஒன்றாக இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் தெரிவித்தார்.

இதன் போது சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, வீதி அபிவிருத்தி, கால்நடை, சுயதொழில் ஊக்கிவிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதில் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச திணைக்களங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

Related Post