தேசிய சுதந்திர தினத்தையொட்டி வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மக்கீன் முகம்மட் அலி சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களுக்கிடையில் சமூக ஒற்றுமையையும்,இன நல்லுறவையும் விலியுறுத்தியும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கும் குரல் கொடுத்தும் இலங்கை முழுவதும் தனது முச்சக்கர சைக்கிள் வண்டியில் பயணித்தார்
01.02.2019ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு யாழ்பாணத்தில் பயணத்தை நிறைவு செய்தார். இன்று(16)
சனிக்கிழமை காலை 10.00மணிக்கு வவுனியா மண்ணை வந்தடைந்த அலிக்கு அகில இலங்கை மக்கள் தலைவரும் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீனால் முச்சக்கர வண்டி வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் பிரதமருடன் முக்கிய நிகழ்வில் கலந்து கொள்ளும் அமைச்சர் வருகை தராமையால் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட், இணைப்பாளரும் நகரசபை உறுப்பினருமான அப்துல் பாரி, நகரசபை உறுப்பினர் லரீப் , பிரதேசசபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகம், வர்த்தக சங்கம் என பலர் கலந்து கொண்டனர்