முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் ,உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு கட்சியின் தலைமையால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக முகா உறுப்பினர் பிரமுகர் எம்மிடம் தெரிவித்தார்.
பம்பலப்பட்டி சிலோன் ஹோட்டலில் நாளை ஞாயிறு (23)அவசர கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலும் இங்கு தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.