ஏ.எச்.எம். பூமுதீன்
மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியில் ரூபா 45 இலட்சம் செலவில் நிர்மானிக்கப்பட்டு வரும் லயன் சித்திக் நதீர் திறந்த அரங்கானது மருதமுனையில் தனி நபர் ஒருவரின் சொந்த நிதியினால் நிர்மானிக்கப்படும் முதலாவது கட்டடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
‘மை ஹோப்’ குழுமம் மற்றும் ஐவா தாதியர் கல்லூரி என்பனவற்றின் தலைவரான சித்திக் நதீரே பிரமாண்ட திறந்த அரங்கிற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
அல்மனாரில் நிர்மானிக்கப்படும் இந்த திறந்த அரங்கிற்கு மேலதிகமாக அரங்கின் மேற்பகுதியில் பாடசாலையின் நிர்வாகப்பகுதி ஒன்றும் நிர்மானிப்பதற்கும் சித்திக் நதீர் உறுதிபூண்டுள்ளார்.
திறந்த அரங்கு தற்போது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளது. இதன் பிற்பாடு நிர்வாக அலுவலகம் நிர்மானிக்க உத்தேசிககப்பட்டுள்ளது.
மருதமுனையின் அபிவிருத்iதியைப் பொறுத்தவரையில் அன்று தொடக்கம் இன்று வரை அரசியல் வாதிகளின் பங்களிப்பு அளப்பரியது.
எனினும் மருதமுனையின் அபிவிருத்தியில் மருதமுனையில் பிறந்து, வாழ்ந்த , வாழந்;துவரும் செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க உயர் பதவிகளில் உள்ளவர்களின் அபவிருத்தி பங்களிப்பு என்பது மிக சொற்பளவானது.
எனினும் முதற்தடைவாக மருதமுனையின் அபிவிருத்தியின் ஒரு புரட்சியாக பெரும் தொகை நிதி ஒன்றை ஒதுக்கீடு செய்து தனி நபர் ஒருவர் மருதமுனை அபிவிருத்திப பங்களப்பதென்பது தொழில் அதிபர் சித்திக் நதீர் என்றால் அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
மருதமுனை அல்மனாரில் இவ்வாறான திறந்த அரங்கை நிர்மானிப்பதற்கு அப்பால் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரிக்கும் அவரது பங்களிப்பு பெருமளவில் கிடைக்கப்பெற்றுள்ளது.
மருதமுனைக்கு அப்பால் அக்கரைப்பற்று , மத்திய முகாம் என அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களின் பல்வேறு சமுக சேவைகளை சித்திக் நதீர் ஆற்றியும் உள்ளார்.
சிறு பராயமுதல் இற்றை வரையான நதீரின் முன்னேற்றம் தற்போதுள்ள இளம் சமுதாயத்தினர்க்கு சிறந்த எடுத்துக்காட்டும் முன்மாதிரியும் ஆகும்.
மருதமுனை அல்மனாரில் நிர்மானிக்கப்பட்டு வரும் திறந்த வெளியரங்கு ஜனவரி மாதத்திற்கு முன்பாக திறந்து வைக்க நதீர் திட்டமிட்டுள்ளார்.
மருதமுனை அல்மனார் சமுகம், மருதமுனை மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் நதீரின் இவ்வாறான சமுக நலன்சார்ந்த நற்பணிகளுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.