துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
அண்மைக் காலமாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அட்டாளைச்சேனை 1 ஆம் பிரிவு,9ஆம் பிரிவு,8ஆம் பிரிவு,15ம் பிரிவு வீதிகளில் மக்கள் பயணிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.அன்றாடம் பாட சாலை செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப் படுவதாகவும் அறிய முடிகிறது.சில குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயரக் கூடிய நிலைக்கும் தள்ளப் பட்டுள்ளனர்.சிறந்த வாடிகால் அமைப்பு தொழில் நுட்பங்கள் இல்லாமையே இதற்கான பிரதான காரணம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.பல வருட காலமாக இம் மக்கள் இவ்வாறு அல்லலுற்று வாழ்கின்ற போதிலும் சம்பந்தப் பட்டவர்கள் இது பற்றி கரிசனை கொண்டதாகவும் அறிய முடியவில்லை.
தொழிற்நுட்ப உத்தியோகத்தர்கள் சிலர் தங்களுக்கான இலஞ்சப் பணங்களைப் பெற்றுக்கொண்டு வேலைகள் செய்யும் இடங்களில் நிற்காது போய்விடுகின்றனர்.செய்யும் வேலைகளை சரியாகச் செய்தாலே எல்லாமே சரியாகும் என மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
எனவே,சம்பந்தப் பட்டவர்கள் இது விடயத்தில் கரிசனை கொள்ளுமாறு மக்கள் பிரதிநிதியாய் கேட்டுக் கொள்கிறேன்.