Breaking
Sat. Nov 23rd, 2024

உணவு பதணிடல் மற்றும் உணவு பொதியிடல் துறையானது இன்று இலங்கையிலையே தவிர்க்க முடியாத தலைசிறந்த துறையாக மாறியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த உணவு பொதியிடலுக்கான சர்வ தேச எக்ஸ்போ தொடர்ந்து அதன் உற்பத்தித் துறைக்கான நாட்டின் மிகப்பெரிய கண்காட்சி நிகழ்வாக மாறியுள்ளது. உணவு பொதியிடலுக்கான சர்வதேச வர்த்தக கண்காட்சி  2001 ஆம் ஆண்டில  தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு இலங்கையின்மிகப்பெரிய உற்பத்திக் கண்காட்சியாகவும் அது தெற்காசியாவில் மிகப்பெரிய உணவுப் பொதியிடல் மற்றும் வேளாண்மை வர்த்தக கண்காட்சிகளில் ஒன்றாக திகழ்கின்றது. என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உணவுப் பொதியிடலுக்கான 18 ஆவது பதிப்பின் கண்காட்சித் தொடரின் அங்குரார்ப்பண வைபவம்  மற்றும்   அதன் முந்தைய 17 ஆவது பதிப்பின்  எக்ஸ்போ விருது வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் பதியுதீன்  இதனை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை உணவு பதப்படுத்தும் சங்கத்தின் தலைவர் சரத் அலஹகோன், செயலாளர்  துசித் விஜேசிங்க, லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆசிம் முக்தார் மற்றும் இந்த துறையில் முக்கிய தொழில் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சினமன் கிராண்ட் ஹோட்டல் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:

18 ஆவது பதிப்பின் கண்காட்சித் தொடர் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் 370 கண்காட்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இயந்திரங்கள் கண்காட்சி அரங்குகளை கொண்டுள்ளது. இந்த எக்ஸ்போவில் சிறிய நடுத்தர தொழில் துறைகளுக்கு சிறப்பு அரங்குகளை வெளிப்படுத்தும் வகையில்  பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. .

உணவு பொதியிடல் துறையானது மிகவும் பரந்தது. இலங்கையின் மிகப்பெரிய உற்பத்தி கண்காட்சியாக 18 வது பதிப்பை நாம் அறிமுகப்படுத்தும் போது ,இந்த நிகழ்வு திருப்திகரமாக இருக்கும்.  மேலும் தெற்காசியாவில் மிகப்பெரிய உணவு, பானங்களின் பொதியிடல் மற்றும் விவசாய வர்த்தகம் ஆகியவற்றில் ஒன்றாகவுள்ளது. இலங்கை.  உணவு பதனிடல் சங்கத்தின் முயற்சிகளுக்கு எங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம்.

2001 ஆம் ஆண்டில் இந்த தொடரின் தொடக்கம் முதன்முதலாக செயலாக்கப்பட்டதிலிருந்து உணவுத் துறையின் தொழில்நுட்ப முன்னேற்றம்,  பொதியிடல், தயாரிப்பு மேம்பாடுமற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பங்கேற்புகளும் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இந்த வருடாந்த கண்காட்சியில் 370 கண்காட்சி விற்பனை நிலையங்கள் மற்றும் அரங்குகளை கொண்டு காட்சியளிக்கும்,   மிகப்பெரிய இந்த நிகழ்விலும், இலங்கையின் உற்பத்திகளுக்கு மிகப்பெரிய கிராக்கி இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.  இந்த ஆண்டு சிறியநடுத்தர தொழில் துறைக்கு   எனது அமைச்சினால்   விசேஷ கண்காட்சி விற்பனை நிலையங்கள் மற்றும் அரங்குகள் இருக்கும்.  இந்த தொழிலில் துறை செயல்பாட்டில்   மைக்ரோ மற்றும்   சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல உள்ளன. உண்மையில் எமது சிறிய நடுத்தர தொழில்    நிறுவனங்களில் 40 சதவீதத்துக்கும்; அதிகமான நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் துறைகளில் இருப்பதாக நாம் நம்புகிறோம்.

1.5 மில்லியன் பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ள இலங்கையின் உணவு பதப்படுத்தும் துணைத் துறையின் வருமானமானது100 மில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.  ISO 9001, ISO 14001 போன்றமுக்கியமான துணைத் துறைகளுக்கு .கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் முன்னோடியான GMPCIFSSI திட்டம் சர்வதேச ISO சான்றிதழ்களை அறிமுகப்படுத்தியது

கொழும்பு சர்வதேச பண்டாரநாயக்க மாநாட்டு மண்டாத்தில் 2019 ஆகஸ்ட் 2-4 ஆம் திகதி  வரை  நடைபெறவிருக்கும் உணவுப் பொதியிடலுக்கான 18 ஆவது பதிப்பின் எக்ஸ்போ கண்காட்சிக்காக  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் உணவு மற்றும் வேளாண்மை   கண்காட்சிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இலங்கை உணவு பதனிடல் சங்கத்தினர் செய்கின்றனர். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Post