முஸ்லிம்களிடத்தில் வறுமை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் முஸ்லிம் உழைப்பாளிகள் உழைக்கும் வருமானத்தில் 2.5 சத வீதத்தினை ஸகாத் செய்ய முன்வர வேண்டும் என விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.
வீடடைப்பு நிர்மானத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தியாவட்டவான் கிராமத்தில் வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
பணம் படைத்தவர்கள் அவர்களுடைய ஸகாத்தை (வரியை) சரியாக செலுத்துவார்களாக இருந்தால் எந்தவொரு முஸ்லிம் கிராமத்திலும் வறுமை இருக்காது என்பதை என்னால் திட்டவட்டமாக கூற முடியும்.
எம்மவர்கள் அரசாங்க சட்டத்திற்கு பயந்தவர்களாகவும், இறைவனின் சட்டத்தை மதிக்க தெரியாதவர்களாகவும் இருக்கின்றார்கள். அரசாங்கத்தின் சட்டமான வருமான வரி கட்டுதல் மற்றும் வேறு வரிகளை கட்டுதல், அரசுக்குரிய இன்னோரென்ன வரியை செலுத்துவதில் பயம் ஆனால் இறைவனின் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு பயம் கிடையாது.
சொத்துக்களை தூய்மையாக்கி தருவதற்காக உழைப்பதில் 2.5 சத வீதத்தினை நாட்டிலுள்ள முஸ்லிம்கள் ஸகாத்தை (வரியை) செய்ய வேண்டும் என்று குர்ஆனின் சொல்லப்பட்ட விடயம். உங்களுடைய சொத்தை, வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு 2.5 சத வீதத்தினை ஸகாத் செய்யுங்கள் நான் உங்களுக்கு காப்புறுதியாக இருக்கின்றேன் என்று இறைவன்; கூறுகின்றான்.
ஆனால் நாங்கள் வாகனத்திற்கு, வீட்டுக்கு, எங்களது உயிருக்கு காப்புறுதி செய்து நம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இறைவனின் சட்டத்தை நாங்கள் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை என்றார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, கல்குடா ஸகாத் நிதியத்தின் தலைவர் மௌலவி.எஸ்.தாஹிர், செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், வீடமைப்பு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலர்; கலந்து கொண்டனர்.
இதன்போது கல்குடா ஸகாத் நிதியத்தினால் வழங்கப்பட்ட காணியில் இருபது வீடுகள் வீடமைப்பு திட்டத்தில் அமையப்பெறவுள்ளதுடன், ஒவ்வொரு வீடும் ஏழரை இலட்சம் ரூபா அரசாங்கத்தின் மாணியத்திலும்;, பயனாளிகளின் மீதி பங்களிப்புடன் அமையப்பெறவுள்ளது.
இவ்வீட்டுத் திட்;ட பயனாளிகளுக்கு உள்ளக வீதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் என்பன இலவசமாக வழங்குவதுடன், இத்திட்டம் நான்கு மாத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்து.