உக்ரெயின் விடயத்தில் ரஷ்யா தொடர்ந்தும் குற்றமிழைத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உதவி ஜனாதிபதி ஜோ பெய்டன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது உக்ரெயினில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்ற நிலையில், ஜோ பெய்டன் அந்த நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கிறார்.
நேற்று அவர் உக்ரெயின் ஜனாதிபதி பெற்றோ பொறசென்கோவை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது, யுக்ரெயினில் தளம்பலை ஏற்படுத்த ரஷ்யா தொடர்ந்தும் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தினார்.
ரஷ்யா தமது போக்கை மாற்றிக் கொள்ள தவறின், சர்வதேச நாடுகளில் இருந்து மேலும் தனிமைப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.