தி. ரஹ்மத்துல்லா
அரபு எமிரேட்சில் விசா மூலம் தங்கியுள்ள அரபு அல்லாத அயல் நாட்டினர், 100 வருட ஒப்பந்தத்தில் ஷார்ஜாவில் வீட்டு மனைகள் வாங்கலாம். வீட்டு மனைகளில் முதலீட்டை அயல் நாட்டினருக்கு ஷார்ஜா முதன் முதலாக அனுமதித்துள்ளது.
ஷார்ஜாவில் டைடல் சிடியில் 7,500 சதுர அடி பரப்ரளவு உள்ள மனைகள், ஒரு சதுர அடி 110திர்ஹம் முதல் 303 திர்ஹம் வரை கிடைக்கும். ( ஒரு சதுர அடி சுமார் 3690 ரூபாய் முதல் 10 000 ரூபாய் வரை ). ஒப்பிட்டால் நம்ம நாட்டு விலைதான்
நல்ல செய்தி தான். யோசிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், வீட்டு மனை வாங்கியபின், ஏதாவது காரணத்தால் ( இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனையில் ) விசா பதுப்பிக்க இயலாமல் போய் விட்டால், என்ன செய்வது என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.