மஹிந்த ராஜபக்ச 18வது சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று 25-11-2014 காலை நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றார்.
சார்க் மாநாடு காத்மண்டுவில் இன்று முதல் 27ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளை நடைபெறும் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். இதனையடுத்து அவரும் பாரியாரும் லும்பினிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி ஆகியோர் இன்று நள்ளிரவு மலேசியா பயணமாகியுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன. மலேசியாவில் நடைபெறவுள்ள மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் இருவரும் பயணமாகியதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.